அண்மையக் காலமாக நாட்டில் நிகழும் பல்வேறு சாலை விபத்துக்களில் இந்திய இளைஞர்கள் பலர் பலியாவது கவலையளிப்பதாக இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சரும், ம.இ.கா தேசியத் தலைவருமான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்துள்ளார்.
அண்மையில், பாரிட் புந்தாரில் சக வகுப்புத் தோழனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியானதோடு, அவனது நண்பன் படுகாயமடைந்த சம்பவம் குறித்த செய்தி வேதனையளிக்கிறது.
இதுபோன்ற பல சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும்.வாகன உரிமம் இன்றி அதனைச் செலுத்த பிள்ளைகளை ஊக்குவிக்கக் கூடாது.இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு சாலை பாதுகாப்பு பற்றி பெற்றோர்கள் சொல்லித்தர வேண்டும் என்று டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தெரிவித்தார்.