என் தமிழ்

மடானி அரசாங்கத்தின் நீர் விவேகப் பயன்பாட்டு பிரச்சாரம்; ஒவ்வொருவரையும் உருமாற்றும்

உலு லங்காட், 08/05/2025 : இன்று வியாழக்கிழமை தொடங்கப்பட்டிருக்கும் மடானி அரசாங்கத்தின் நீர் விவேகப் பயன்பாட்டு பிரச்சாரமானது, நாட்டின் நீர் வளங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை வெற்றிகரமாக உருமாற்றுவதற்கு ஒவ்வொரு தனிநபரையும் அழைப்பதாக துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, அனைத்து நிலை மக்களிடத்திலும், ஒரு கலாச்சார மாற்றத்தைத் தூண்டுவதில், இந்தப் பிரச்சாரம், பரந்த சமூக விழிப்புணர்வையும் வளர்க்கும் என்று எரிசக்தி மாற்றம், நீர் உருமாற்ற அமைச்சர் அவர் கூறினார்.

இதனிடையே, இப்பிரச்சாரத்தின் மூலமாக கல்வி அணுகுமுறை, பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைப்பு மற்றும் நிலைத்தன்மை, பாதுகாப்பு, ஆதரவு மற்றும் பராமரிப்பு ஆகிய நான்கு முக்கிய அம்சங்களின் மூலம் விரிவான மாற்றத்தை உட்படுத்த முடியும் என்றார் அவர்

Source : Bernama

#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Scroll to Top