பாகிஸ்தான் மீனவர் வலையில் சிக்கிய 70 அடி நீள திமிங்கலம்

பாகிஸ்தான் மீனவர் வலையில் சிக்கிய 70 அடி நீள திமிங்கலம்

0

பாகிஸ்தானின் கராச்சி நகரின் ஓரம் உள்ள கடற்பகுதியில் மீனவர்களின் வலையில் 70 அடி நீளமுள்ள திமிங்கலம் சிக்கியுள்ளது. 
நேற்று அதிகாலை தங்களது வலைக்குள் அந்த திமிங்கலம் பிணமாக கிடந்ததாகவும், 12 மீனவர்களின் துணையுடன் மிகவும் சிரமப்பட்டு அந்த ராட்சத திமிங்கலத்தை 2 படகுகள் கரைக்கு கொண்டு வந்து சேர்த்ததாகவும் கஸ் பந்தர் கிராம குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 
அந்த திமிங்கலம் உயிருடன் வலையில் சிக்கிய பின்னர் இறந்துப் போனதா? அல்லது, பிணமாக மிதந்து வந்து வலைக்குள் மாட்டிக் கொண்டதா? என்பது தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.