உலகம்

மறைந்தார் போப் ஆண்டவர்

வாட்டிகன், 21/04/2025 : இறை இயேசுவின் உயிர்ப்பு தினமாகிய ஈஸ்டர் பெருநாளின் கொண்டாட்டம் கூட இன்னும் நிறைவடையாத வேளையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் இன்று காலமாகிய செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வயது மூப்பு மற்றும் சுவாச பிரச்சனை காரணமாக சிகிச்சையில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் தமது 88-வது வயதில் இயற்கை எய்தினார்.

சுவாச கோளாறு காரணமாக கடந்த 14-ஆம் தேதி இத்தாலி ரோமில் உள்ள மருத்துவமனையில் போப் ஆண்டவர் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.

2013-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் பிரான்சிஸ் பணியாற்றி வந்தார்.

முன்னதாக, போப் பதவியில் இருந்து 26-வது பெனடிக்கின் விலகலைத் தொடர்ந்து, தலைமை குருக்களால் பிரான்சிஸ், போப் ஆண்டவராக நியமனம் பெற்றார்.

தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவைப் பூர்வீகமாக கொண்ட அவரின் மறைவு குறித்து உலக வாழ் கிறிஸ்துவ அன்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source : Bernama

#PopeDeath
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews