சின் சியூ நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட ஜாலூர் கெமிலாங்; விசாரணை அறிக்கை தேசிய சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

சின் சியூ நாளிதழில் பிரசுரிக்கப்பட்ட ஜாலூர் கெமிலாங்; விசாரணை அறிக்கை தேசிய சட்டத்துறையிடம் ஒப்படைப்பு

கோலாலம்பூர், 19/04/2025 : சின் சியூ நாளிதழிலின், முதல் பக்கத்தில் முழுமையற்ற ஜாலுர் கெமிலாங் படத்தை பிரசுரித்த விவகாரம் தொடர்பில், அதன் தலைமை செய்தி ஆசிரியர் மற்றும் துணை தலைமை செய்தி ஆசிரியருக்கு எதிரான விசாரணை அறிக்கை நேற்று தேசிய சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

அத்தகவலை உறுதிசெய்த தேசிய போலீஸ் படை தலைவர் டான் ஶ்ரீ ரசாருடின் ஹுசேன், நேற்று வரை போலீசார் 54 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார்.

மேலும், விசாரணைக்கான தேவையின் அடிப்படையில் இதர சாட்சிகளை அழைக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கட்டுரையை வெளியிடுவதில் தொழில்நுட்ப கோளாரு ஏற்பட்டதினால் இத்தவறு நிகழ்ந்ததாக நாளிதழ் தரப்பினர் கூறியிருப்பது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அந்த விளக்கப்படத்திற்கு அனுமதி அளித்த தலைமை ஆசிரியரும், அதன் வரைகலை வடிவமைப்பாளருமான துணை தலைமை ஆசிரியரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்கு உதவ, புக்கிட் அமானில் உள்ள அரச மலேசிய போலீஸ் தலைமையகத்தில், வகைப்படுத்தப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் அவர்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

1963ஆம் ஆண்டு முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும் சின்னங்கள் மற்றும் பெயர்கள் சட்டம் செக்‌ஷன் 3(1)(c), 1984ஆம் ஆண்டு அச்சிடும் இயந்திரம் மற்றும் தயாரிப்பு சட்டம் செக்‌ஷன் 4(1)(b)-இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Source : Bernama

#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews