இப்தார்; அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் தளமாக பயன்படுத்திக் கொள்ள பரிந்துரை

இப்தார்; அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் தளமாக பயன்படுத்திக் கொள்ள பரிந்துரை

கோலாலம்பூர், 19/04/2025 : மலேசிய தொலைகாட்சி வானொலி, ஆர்.சி.எம்-இன் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம், பி.வி.ஆர்.டி.எம் உறுப்பினர்கள், தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தளமாக, இப்தார் எனப்படும் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகத்தை பயன்படுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர்.

செய்தியாளர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் செய்தி வாசிப்பாளர்கள் உட்பட தரமான தொழில்துறையினரை உருவாக்க, ஓய்வு பெற்ற ஆர்.டி.எம் பணியாளர்களின் பரந்த அனுபவமும் திறமையும் வழிகாட்டியாக தேவைப்படுவதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

“புதிய செய்தி வாசிப்பாளர்கள், புதிய தொகுப்பாளர்கள் ஆகியவற்றில் ஒப்பீடுகள் உள்ளன. அவர்கள் அதிக அனுபவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நம்புகிறேன். பி.வி.ஆர்.டி.எம் உறுப்பினர்களுக்கு அந்த அனுபவங்கள் இருக்கும். அத்தளத்தை உருவாக்கி சிறு உதவித் தொகையும் வழங்கப்படும்,” என்றார் அவர்.

புதிய தலைமுறை செய்தி வாசிப்பாளர்கள் மற்றும் ஒளிபரப்பு ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொழில்துறை தரநிலைகளுக்கு ஏற்ப தொடர்ந்து செயல்படுவதற்கு ஓய்வு பெற்ற ஆர்.டி.ம் பணியாளர்களின் பரந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை அங்காசாபூரியில் நடைபெற்ற பி.வி.ஆர்.டி.எம் மற்றும் இப்தார்-இன் 2025ஆம் ஆண்டின் நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தில் உரையாற்றிய போது அவ்வாறு தெரிவித்தார்.

Source : Bernama

#Iftar
#FahmiFadzil
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews