புதிய பாண்டா கரடி ஜோடியை மலேசியா பெறவுள்ளது

புதிய பாண்டா கரடி ஜோடியை மலேசியா பெறவுள்ளது

கோலாலம்பூர், 17/04/2025 : சீனாவின் சிறப்பு தூதர்களாக கருதப்படும், புதிய பாண்டா கரடி ஜோடியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு மலேசிய பெறவுள்ளது.

சீன அதிபர் ஷி ஜின்பிங் மலேசியாவிற்கு மேற்கொண்ட அலுவல் பயணத்தின் போது, மலேசியா மற்றும் சீனா அரசாங்கங்களுக்கு இடையில் பாண்டா கரடியின் பாதுகாப்பு தொடர்பான அனைத்துல ஒத்துழைப்பு திட்டம் குறித்து, நேற்று புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

மலேசிய அரசாங்கத்தின் சார்பாக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை, PERHILITAN இயக்குநர் டத்தோ அப்துல் காடிர் அபு ஹஷிமும் ஆர்.ஆர்.சி-யைப் பிரதிநிதித்து சீன வனவிலங்கு பாதுகாப்பு சங்கம், CWCA-யின் பொதுச் செயலாளர் யான் ஜியான, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Source : Bernama

#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews