தாப்பா, 13/04/2025 : நாடு முழுவதும் இணைய சேவையில் காணப்படும் பலவீனங்களைக் களைவதற்கான தீர்வுகளை, இன்று மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என்று தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் உத்தரவிட்டிருந்தார்.
அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அந்நிறுவனங்கள் கடுமையான நடவடிக்கைகளை சந்திக்கலாம் எனவும் அவர் எச்சரித்தார்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்சிஎம்சி நிர்வாகத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் சலிம் ஃபாதே டின்னை இன்று காலை தாம் தொடர்பு கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு முன்னதாக தெரிவிக்கப்பட்டுள்ள இணைய சேவை பலவீனங்கள் தொடர்பில் உடனடியாக பதிலளிக்குமாறு அறிவுறுத்தியதாகவும் ஃபஹ்மி கூறினார்.
மார்ச் 5 ஆம் தேதி, நாட்டின் அனைத்து இடங்களிலும் இணைய சேவையின் வேகத்தை கண்காணிக்கும் சோதனையை எம்.சி.எம்.சி நடத்தியது. அதில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், தங்களுக்கு கிடைக்கும் பிரச்சனைகள் மற்றும் புகார்களைத் தீர்ப்பதில் மிகவும் மெத்தனமாக செயல்படுவதை நான் கண்டறிந்தேன், என்றார் அவர்.
சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த பலவீனங்களை களையத் தவறினால், லட்சக்கணக்கான ரிங்கிட் அபராதங்கள் உட்பட கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் ஃபஹ்மி எச்சரித்திருக்கின்றார்.
Source : Bernama
#FahmiFadzil
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews