சீனா-ஆசியான் சுதந்திர வர்த்தகப் பகுதி மேம்படுத்தல் நெறிமுறை; ஒத்துழைப்பை வலுப்படுத்தும்

சீனா-ஆசியான் சுதந்திர வர்த்தகப் பகுதி மேம்படுத்தல் நெறிமுறை; ஒத்துழைப்பை வலுப்படுத்தும்

கோலாலம்பூர், 11/04/2025 : ஆசியான் – சீனா உறவில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கும் சீனா-ஆசியான் சுதந்திர வர்த்தகப் பகுதி மேம்படுத்தல் நெறிமுறை பதிப்பு 3.0-இல் கையெழுத்திடப்பட்டவுள்ளது.

இதன் வழி வட்டார வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்த முடியும்.

இந்த வரலாற்று தருணம் அடையாளமாக மட்டும் இல்லாமல், BRI எனப்படும் Belt and Road Initiative முயற்சியின் கீழ் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் ஒரு வியூகத் திட்டமாகும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.

நிலைத்தன்மை, நியாயமான சந்தை மற்றும் ஒற்றுமையை வளர்க்கும் அணுகுமுறையுடன் முன்னேற மலேசியா உறுதிப்பூண்டுள்ளதாக ஃபடில்லா யூசோப் கூறினார்.

இந்த சிக்கலான உலகமயக் காலக்கட்டத்தில், குறிப்பாக இவ்வாண்டு மலேசியா ஆசியான் தலைவராக செயல்படும் நிலையில், கருத்து வேறுபாடுகளைக் களைவதிலும், கொள்கைகளை வடிவமைப்பதிலும் வட்டார நல்லிணக்கத்தை மேம்படுத்துவதிலும் ஊடகங்கள் மற்றும் Pemikir குழு முக்கிய பங்கு வகிக்கின்றன.

“எனினும், சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். புதிய வரிகள் உட்பட அண்மைய உலகளாவிய வர்த்தக நடவடிக்கைகள், மீள்தன்மை கொண்ட பொருளாதார கூட்டணிகளின் அவசியத்தை காட்டுகின்றன. 2025ஆம் ஆண்டில் ஆசியான் தலைவரக மலேசியா ஒரு கூட்டுறவு அணுகுமுறையை மேம்படுத்துவதற்கு உறுதிபூண்டுள்ளது. நிலைத்தன்மை, நியாயமான சந்தை மற்றும் பகிரப்பட்ட மதிப்புகளை ஊக்குவிக்கிறது,” என்றார் அவர்.

இன்று, ஆசியான்-சீனா ஊடக பெமிகீர் குழு கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்து உரையாற்றும் போது படில்லா அவ்வாறு தெரிவித்தார்.

Source : Bernama

#ChinaMalaysia
#ASEAN
#ASEANChina
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews