தாப்பா, 10/04/2025 : கடந்த ஏப்ரல் முதலாம் தேதி, சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்சில் நடந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தினால் எந்தவொரு மருத்துவமனை வசதிகளும் பாதிக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, இச்சம்பவத்தில் இதுவரை எந்தவோர் உயிரிழப்பும் பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.
“இவ்வளவு பெரிய ஒரு தீச்சம்பவத்தில் தற்போது எந்தவோர் உயிரிழப்பும் பதிவாகவில்லை. சிலர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ வசதிகளும் பாதிக்கப்படவில்லை”, என்று அவர் கூறினார்.
இன்று, பேராக், தாப்பா மருத்துவமனையில், பத்தாங் பாடாங் மாவட்டத்தின் சுகாதாரத் துறை பணியாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
நேற்று நண்பகல் மணி 12 நிலவரப்படி, 38 பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர் சுல்கிஃப்லி கூறினார்.
Source : Bernama
#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews