ஜோகூர் பாரு, 06/04/2025 : இவ்வாண்டு தொடக்கத்தில் முகநூல் வாயிலாக இல்லாத ஒரு முதலீட்டு திட்டத்தை நம்பி, நிர்வாகம் ஒன்றின் நிர்வாகி ஒருவர் ஆறு லட்சத்து 51,800 ரிங்கிட்டை இழந்துள்ளார்.
குறுகிய காலத்தில் அதிக லாபம் என்று முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட அந்த முதலீடு திட்டத்தில் 45 வயதுடைய அந்நபர் கவரப்பட்டதாக, மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அசிச் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட அந்நபர் அங்கு அளிக்கப்பட்டிருந்த இணைப்பை அழுத்தியதை அடுத்து, ஒரு முதலீட்டு நிறுவனத்தின் பெயரில் உள்ள வாட்ஸ் ஆப் குழுவில் சேர்க்கப்பட்டதாக அறிக்கை ஒன்றில் ஏசிபி ரயிஸ் முக்லிஸ் அஸ்மான் அசிச் கூறினார்.
அம்முதலீட்டு திட்டம் குறித்து துல்லியமான விளக்கத்தை ஐந்து வெவ்வேறு நபர்கள் தமது அளித்ததாக கூறிய அந்நபர், பின்னர், செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து அதில் தமது முதலீட்டு கணக்கைப் பதிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 13 தொடங்கி மார்ச் 27-ஆம் தேதி வரை தமது சொந்த சேமிப்பில் இருந்த 651,800 ரிங்கிட்டை 25 பணப் பரிவர்த்தனைகளின் மூலம் மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அந்நபர் செலுத்தி உள்ளார்.
வாக்குறுதி அளிக்கப்பட்ட லாபத்தைப் பெற கூடுதல் பணம் செலுத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டபோதுதான், தாம் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்ததாக ரயிஸ் முக்லிஸ் கூறினார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 420-இன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்படுகிறது.
Source : Bernama
#Entamizh
#Johor
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews