ஆயேர் குரோ, 05/04/2025 : 2026 மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டுக்கான தொடக்க விழாவை மலாக்காவில் நடத்துவதற்கு, அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
முழுமையான உள்கட்டமைப்பு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய கலாச்சாரம், மற்றும் சுவாரஸ்யமான உணவுப் பழக்க வழக்கங்களிலும் இம்மாநிலம் வளமாக இருப்பதால், வரலாற்று சிறப்புமிக்க மலாக்கா தொடக்க விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இன்று, மலாக்கா, ஆயர் குரோ அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற 2025 மடானி நோன்புப் பெருநாள் விருந்துபசரிப்பில் உரையாற்றிய பிரதமர் அவ்வாறு கூறினார்.
இதனிடையே, மலாக்காவின் சிறந்த உள்கட்டமைப்புகளினால், முதலீட்டாளர்கள், குறிப்பாக சீனா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் முதன்மை தேர்வாக மலாக்கா மாறியுள்ளதை பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.
Source : Bernama
#PMAnwar
#Melakka2026
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews