பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாநில அரசாங்கம் உதவிகளை வழங்கும்

பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாநில அரசாங்கம் உதவிகளை வழங்கும்

புத்ரா ஹைட்ஸ், 04/04/2025 : வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி பள்ளிக்குச் செல்லவிருக்கும் நிலையில், அவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராஃபூடின் இட்ரிஸ் ஷாவின் வேண்டுக்கோளுக்கு இணங்க, Yayasan Islam Darul Ehsan, YIDE இந்த உதவியை வழங்குவதாக அவர் கூறினார்.

“யயாசான் இஸ்லாம் டாருல் இசான்(YIDE), பாதிக்கப்பட்டவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் மற்றும் ஆடைகள் போன்ற உதவிகளை வழங்கும். அதோடு, அச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 1,000 ரிங்கிட் உதவி தொகையை கல்வி அமைச்சு வழங்கும்”, என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர், அம்பாங் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்ப சுமையைக் குறைக்கவும், மாநில அரசாங்கம் உறுதிப் பூண்டுள்ளதாகவும் அமிருடின் குறிப்பிட்டார்.

Source : Bernama

#YIDE
#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews