பாதிக்கப்பட்ட பொதுச் சேவை ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய பரிசீலிக்கும்படி அறிவுறுத்து

பாதிக்கப்பட்ட பொதுச் சேவை ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய பரிசீலிக்கும்படி அறிவுறுத்து

புத்ரா ஹைட்ஸ், 04/04/2025 : புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பொதுச் சேவை ஊழியர்களுக்கு (பி,டி,ஆர்) எனப்படும் வீட்டில் இருந்து வேலை செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுச் சேவை செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த வசதி அனுமதிக்கப்படுவதாக பொதுச் சேவை தலைமை இயக்குநர் டான் ஶ்ரீ அஹ்மட் டஹ்லான் அப்துல் அசிஸ் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி அமல்படுத்தப்பட்ட மனிதவள சேவை சுற்றறிக்கையான பி.பி.எஸ்.எம் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கைக்கு இது இணங்குவதாகவும் டான் ஶ்ரீ வான் அஹ்மட் டஹ்லான் அப்துல் அசிஸ் விளக்கினார்.

புத்ரா ஹைட்ஸ் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பொதுச் சேவை அதிகாரிகள் தங்கள் தனிப்பட்ட விவரங்களை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை பொது சேவைத் துறை அறிந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில், பி,டி,ஆர் விண்ணப்பத்தை துறைத் தலைவர்கள் பரிசீலிக்கலாம் என்று வான் அஹ்மட் கேட்டுக் கொண்டார்.

சுற்றுச்சூழல் தூய்மை காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சேதம், தொற்று நோய் பரவல், குடியிருப்பு பகுதிகளில் இயற்கைப் பேரிடர்கள் போன்ற காரணங்களுக்கு பி,டி,ஆர் பரிசீலிக்கப்படலாம்.

Source : Bernama

#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews