ரெங்காம் , 03/04/2025 : வெள்ளம் காரணமாக ஜோகூர், ரெங்காம், கம்போங் தெங்காவில் உள்ள 29 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர், ஶ்ரீ கம்போங் தெங்கா தேசிய பள்ளியின் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு தொடங்கி பெய்த கனமழை காரணமாக வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவர் உட்பட பாதிக்கப்பட்ட அனைவரும் தற்காலிக நிவாரண மையத்தில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
அதிகாலை மணி 3.10க்கு அவசர அழைப்பு கிடைத்தவுடன் ஐந்து உறுப்பினர்கள் வெள்ளம் ஏற்பட்ட இடத்திற்கு விரைந்ததாக, ரெங்காம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை இரண்டாவது மூத்த அதிகாரி இஸ்மாயில் மாமாட் தெரிவித்தார்.
வீடுகளில் அகப்பட்டுக் கொண்ட 88 பேர் படகு மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டு தற்காலிக நிவாரண மையத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
Source : Bernama
#JohorFloods
#johor
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews