மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் 13 பேர் சிவப்பு மண்டல சிகிச்சை பிரிவில் அனுமதி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில் 13 பேர் சிவப்பு மண்டல சிகிச்சை பிரிவில் அனுமதி

சுபாங் ஜெயா, 02/04/2025 : புத்ரா ஹைட்சில்  நிகழ்ந்த தீச்சம்பவத்தில் காயமடைந்த 111 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், அவர்களில் 13 பேர் சிவப்பு மண்டல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில், 55 பேர் மஞ்சல் மண்டல சிகிச்சை பிரிவிலும் எஞ்சிய 43 பேர் பச்சை மண்டல சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்தார்.

111 பேரில், 80 பேர் அரசாங்க மருத்துவமனையிலும் 31 பேர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோர் தற்காலிக நிவாரண மையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 20 நிறுவனங்களைச் சேர்ந்த 272 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக வான் அஸ்லான் தெரிவித்தார்.

“20 நிறுவனங்களைச் சேந்த 272 பேர். பிடிஆர்எம், தீயணைப்புப் படை என்று பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றுகின்றனர்,” என்றார் அவர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு கூறினார்.

இச்சம்பவத்தில் 235 கடைகளும் 399 வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

Source : Bernama

#PetronasGasPipelineAccident
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews