கறுப்பின வாலிபர் சுட்டுக்கொலை எதிரொலி: மிசவுரியில் கலவரம்

கறுப்பின வாலிபர் சுட்டுக்கொலை எதிரொலி: மிசவுரியில் கலவரம்

030513

அமெரிக்காவின் மிசவுரி மாநிலத்தில் கறுப்பின வாலிபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு கலவரம் வெடித்துள்ளது.

மிசவுரியின் பெர்குசன் நகரில் வசித்து வந்த மிக்கேல் பிரவுன் என்ற 18 வயது கறுப்பின வாலிபர் சனிக்கிழமை போலீஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

பெர்குசனில் நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியில் உள்ள கார்கள் மற்றும் கடைகளை உடைத்தனர். ஒரு கட்டிடத்திற்கு தீ வைத்தனர். கடைகளுக்குள் புகுந்து சூறையாடியதுடன், பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர். 

இதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. கலவர தடுப்பு பிரிவு போலீசார் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டதாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.