வாகனங்களுக்கான இயந்திர எண்ணெய்; வர்த்தக விளக்க உத்தரவை அரசாங்கம் அமல்படுத்தும்

வாகனங்களுக்கான இயந்திர எண்ணெய்; வர்த்தக விளக்க உத்தரவை அரசாங்கம் அமல்படுத்தும்

மலாக்கா, 20/03/2025 : 2024-ஆம் ஆண்டு மோட்டார் வாகனங்களுக்கான இயந்திர எண்ணெயின் சான்றிதழ் மற்றும் குறியிடுதலுக்கான வர்த்தக விளக்க உத்தரவை அரசாங்கம் வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி தொடங்கி அமல்படுத்தவுள்ளது.

சந்தையில், போலி மோட்டார் வாகன இயந்திர எண்ணெய் விற்பனையைக் கட்டுப்படுத்த இச்சட்ட அமலாக்கம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

மோட்டார் வாகன இயந்திர எண்ணெய்யின் அனைத்து விற்பனை மற்றும் தயாரிப்பிற்கு அங்கீகாரச் சான்றிதழாக SIRIM-மின் முத்திரை அல்லது வில்லை இருக்க வேண்டும் என்று உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹமட் அலி தெரிவித்தார்.

வாகனத்தின் இயந்திரத்தை சேதப்படுத்துவது மட்டுமின்றி, பயனீட்டாளர்களின் பாதுகாப்பைப் பாதித்து, விபத்து ஏற்படுவதற்கான ஆபத்தை ஏற்படுத்தும் போலி இயந்திர எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனையைக் கையாள இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது.

”இத்திட்டத்தின் வழி, வாகன இயந்திர போலி எண்ணெய் பொருட்களை விற்கும் மற்றும் தயாரிக்கும் குறிப்பிட்ட தரப்பினரின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்த முடியும். நாங்களும், பெட்ரோனாஸ் போன்ற மோட்டார் இயந்திர எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களைப் பாதுகாக்க முடியும்,” என்றார் அவர்.

இன்று, தங்கா பத்து தொழில்துறை பகுதி, ‘Petronas Melaka Lube Blending Plant’-இல், 2024ஆம் ஆண்டு வர்த்தக விளக்க உத்தரவு அமலாக்கம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews