3 நாட்களில் திருப்பதியில் 1000 திருமண ஏற்பாடு

3 நாட்களில் திருப்பதியில் 1000 திருமண ஏற்பாடு

caterers-in-india

தொடர்ந்து 3 நாட்கள் முகூர்த்த நாட்கள் என்பதால் திருமலையில் 1000 திருமணங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமண பொருட்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.திருப்பதி ஏழுமலை யான் கோயில் உள்ள திருமலையில் எந்த இடத்தில் திருமணம் செய்தாலும் சுவாமியின் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நித்திய கல்யாணம் பச்சை தோரணம் என்கிற வகையில் தினந்தோறும் சுவாமிக்கு கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. எனவே திருப்பதி கோயிலில் எப்போதும் பச்சை தோரணமாக காட்சியளிக்கும்.இந்நிலையில், வரும் 13, 14, 15ம் தேதி ஆகிய 3 நாட்கள் சுபமுகூர்த்த நாள் என்பதால் இந்த 3 நாட்களில் ஆயிரம் திருமணங்கள் வரை செய்ய திருமலையில் உள்ள மண்டபங்கள் மற்றும் புரோகிதர் சங்கத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உள்ள புரோகிதர் சங்கத்தில் மட்டும் 700 திருமணங்கள் வரை நடத்தக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்த சங்கத்தில் ஒரே நேரத்தில் 100 திருமணங்கள் வரை நடத்த முடியும். இதனால் திருமலை திருப்பதி தேவஸ்தான கல்யாண கட்டா துணை செயல் அலுவலர் கிருஷ்ணா ரெட்டி இதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.திருமலையில் மடங்களில் உள்ள திருமண மண்டபங்கள் அனைத்தும் முன்பதிவு முடிந்து விட்டது. எனவே, இந்த 3 சுபமுகூர்த்த தினத்தில் புரோகிதர்கள் மற்றும் நாதஸ்வர வித்வான்களுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.