கோலாலம்பூர், 07/03/2025 : கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு, இன்று 32 பேர் உயரிய விருதுகளைப் பெற்றனர். கூட்டரசுப் பிரதேச தினத்தை முன்னிட்டு, இன்று 32 பேர் உயரிய விருதுகளைப் பெற்றனர்.
அவர்களில், கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாபாவும் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சிலும் அடங்குவர்.
இஸ்தானா நெகாரா, பாலாய்ருங் ஶ்ரீயில் மாட்சிமை தங்கிய மாமன்னர் அந்த 32 பேருக்கும் இந்த விருதுகளை வழங்கினார்.
அவர்களில் டாக்டர் சலிஹாவிற்கும் கூட்டரசு பிரதேச துறை தலைமை இயக்குநர் டத்தோ நோரிடா அப்துல் ரஹிமிற்கும் டத்தோ ஶ்ரீ பட்டம் வழங்கப்பட்டது.
அதேவேளையில், டத்தோ பட்டத்தைப் பெற்ற ஒன்பது பேரில், ஃபஹ்மியும் அடங்குவார்.
அதோடு, அறுவருக்கு Johan Mahkota Wilayah (JMW), ஐவருக்கு Kesatria Mahkota Wilayah (KMW), நால்வருக்கு Mahkota Wilayah (AMW) மற்றும் அறுவருக்கு Pangkuan Mahkota Wilayah (PPW) ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இச்சடங்கில் பிரதமரும் அவரின் துணைவியார் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா இஸ்மாயிலும் கலந்து கொண்டனர்.
Source : Bernama
#FederalTerritoryAwards
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.