ஓ.பி.ஆர் 3 விழுக்காட்டில் நிலைநிறுத்தப்படும் – பி.என்.எம்

ஓ.பி.ஆர் 3 விழுக்காட்டில் நிலைநிறுத்தப்படும் - பி.என்.எம்

கோலாலம்பூர், 06/03/2025 : ஓ.பி.ஆர் எனும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 3 விழுக்காட்டில் நிலை நிறுத்துவதற்கு, பேங்க் நெகாரா மலேசியா, பி.என்.எம் இன்று நடைபெற்ற நாணயக் கொள்கை செயற்குழு,எம்.பி.சி-இன் முதல் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

நேர்மறையான தொழிலாளர் சந்தை, தொடரும் மிதமான பணவீக்கம் மற்றும் நிலையான பணவியல் கொள்கைகளின் மூலம், இவ்வாண்டு உலக பொருளாதாரம் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பெரும்பாலான முன்னேற்றம் கண்ட பொருளாதாரங்களில் பணவீக்கம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பி.என்.எம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், கடந்த கால நாணயக் கொள்கை இறுக்கத்தின் விளைவுகளைக் குறைப்பதன் மூலமும் அது எளிதாக்கப்பட்டது.

அதேவேளையில், தொடர்ச்சியான தொழில்நுட்ப மேம்பாடு உலகளாவிய வர்த்தகத்தை ஆதரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாகவும் அது கூறியது.

மேலும், அதிக வர்த்தகம் மற்றும் முதலீட்டு கட்டுப்பாடுகளின் நிலையற்ற தன்மையால் அதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Source : Bernama

#BankNegaraMalaysia
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews