புத்ராஜெயா, 06/03/2025 : மாநில அரசாங்கத்திற்கு வழங்கும் மூலதன மானிய விகிதத்தை 25 விழுக்காடு, அதாவது 10 கோடியே 90 லட்சம் ரிங்கிட்டை, 54 கோடியே 80 லட்சம் ரிங்கிட்டாக உயர்த்த, மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்ற 2025-ஆம் ஆண்டு தேசிய நிதி மன்றக் கூட்டத்தில், அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது.
2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு, மேற்கொள்ளப்படும் முதல் மறுசீரமைப்பு இதுவாகும் என்று பிரதமரின் மூத்த பத்திரிக்கைச் செயலாளர் துங்கு நஸ்ருல் அபைடா கூறினார்.
2025 ஆம் ஆண்டில் மாநில அரசாங்கங்களுக்கு மத்திய அரசின் மானியங்களின் மொத்தத் தொகையும், தொள்ளாயிரத்து 80 கோடி ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் அத்தொகை, தொள்ளாயிரத்து 30 கோடி ரிங்கிட்டாக இருந்தது என்று பிரதமர் அலுவலகத்தின் தினசரி விளக்கமளிப்பின்போது, துங்கு நஸ்ருல் அபைடா தெரிவித்தார்.
மாநில அரசாங்கம் மக்களுக்கான சேவையை மேம்படுத்த உதவும் வகையில் இந்த ஒதுக்கீட்டின் அதிகரிப்பு உள்ளது என்றும் பிரதமர் கூறினார். மலேசிய மக்களின் நன்மை மற்றும் நல்வாழ்வுக்காக, அனைத்து மாநில அரசாங்களுடனும் உறவுகள் தொடர்வதை உறுதி செய்வதில் மடானி அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
என்றார் துங்கு நஸ்ருல் அபைடா.
வடக்கு மண்டல அமலாக்கத் தரப்பு, N-C-I-A-வின் 33-வது கூட்டம் தொடர்பில் கருத்துரைத்த அவர், வடக்கு மண்டல பொருளாதார வழித்தடம், N-C-E-R, 2024-ஆம் ஆண்டும் முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 470 கோடி ரிங்கிட் முதலீடுகளை வெற்றிகரமாக ஈர்த்ததோடு, 14,000-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாக கூறினார்.
இன்று, பிரதமர் அலுவலகத்தில் இருந்து பிரதமரின் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிப்பரப்பப்பட்ட விளக்கமளிப்பில், அவர் அதனைத் தெரிவித்தார்.
Source : Bernama
#PMAnwar
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews