மதத்தை கேலி செய்யும் தரப்பினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – செ.வே.முத்தமிழ்மன்னன்

மதத்தை கேலி செய்யும் தரப்பினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - செ.வே.முத்தமிழ்மன்னன்

கோலாலம்பூர் 04/03/2025 : தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு எடுக்கப்படும் காவடி நடனத்தை கேலி செய்தவர்கள் மீது தகவல் தொடர்பு துறை தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் செ.வே.முத்தமிழ்மன்னன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டில் மிகவும் பிரபலமான அஸ்ட்ரோ ஏரா எப்.எம் வானொலி நிறுவனத்தின் ஊழியர்கள் காவடி நடனத்தை கேலி செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு MCMC க்கு உத்தரவு பிறப்பித்த தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பாட்சிலுக்கு சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏரா எப்.எம். ஊழியர்கள் மற்றும் ஆஸ்ட்ரோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் மதத்தை கேலி செய்யும் தரப்பினர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கம் கோரிக்கையை முன் வைக்கிறது என்று அவர் சொன்னார்.

#EraFM
#MalaysiaTamilJournalistAssociation
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews