கோலாலம்பூர், 04/03/2025 : பிற மத சடங்குகளை அவமதித்து காணொளி பதிவேற்றம் செய்த விவகாரம் தொடர்பில் உள் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் வானொலி நிலையத்தின் மூன்று அறிவிப்பாளர்களும் அடுத்த அறிவிப்பு வரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரத்தை தமது தரப்பு தீவிரமாக கருதுவதோடு, ERA FM-இன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நபில் அஹ்மட், அஸாட் ஜஸ்மின் மற்றும் ராடின் ஆகிய மூன்று அறிவிப்பாளர்களின் காணொளி பதிவு குறித்து வருத்தம் தெரிவிப்பதாக, Astro Audio வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
முழுமையான வழிகாட்டுதல்களுக்கும் தேவைகளுக்கும் இணங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருவதாக, Astro Audio அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
கேட்பவர்களின் நம்பிக்கை உட்பட ஊடக சூழலை மதிக்கும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.
பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்ய உள்ளடக்க மதிப்பாய்வு செயல்முறையை வலுப்படுத்த அந்த ஒலிபரப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாக, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Source : Bernama
#EraFM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.