சேன் ராயனின் பெற்றோர் செய்த விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

சேன் ராயனின் பெற்றோர் செய்த விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

ஷா ஆலம், 04/03/2025 : AUTISTISME எனப்படும் மதி இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் சேன் ராயன் அப்துல் மதீனுக்குக் காயங்கள் ஏற்படும் அளவில் புறக்கணித்ததாக தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை ரத்து செய்வதற்காக, அச்சிறுவனின் பெற்றோர் செய்த விண்ணப்பத்தை ஷா ஆலம் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

சேன் ராயனின் பெற்றோர் சைம் இக்வான் சஹாரி மற்றும் இஸ்மனிரா அப்துல் மனாவ் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் குறை ஏதும் இல்லை என்றும், அவை 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டம் Seksyen 31 (1) (a)-இன் கீழ் முறையாக மேற்கொள்ளப்பட்டிருப்பதை கண்டறிந்தப் பின்னர் நீதிபதி ரோஸ்சியானயாத்தி அஹ்மாட் இம்முடிவை எடுத்துள்ளார்.

பாதுகாப்பில் இருக்கும் அச்சிறுவனக்கு காயங்கள் ஏற்படும் அளவிற்கு புறக்கணித்ததாக நீதிபதி ரோஸ்சியானயாத்தி அஹ்மாட் தமது முடிவை வாசிக்கும் போது தெரிவித்தார்.

எனவே, அவர்களுக்கு போதுமான அறிவிப்புகளும் வழங்கப்பட்டிருப்பதை நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

அவர்கள் பெட்டாலிங் ஜெயா செக்ஷன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டிருக்கும் நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை மார்ச் 11ஆம் தேதி வழக்கம் போல நடைபெறும்.

Source : Bernama

#AutismKid
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews

Comments are closed, but trackbacks and pingbacks are open.