கோலாலம்பூர், 26/02/2025 : 1969 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான வானிலை தரவுகளின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் பகாங், கேமரன் மலையில் வெப்பநிலை அதிகரித்து வருவதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சுற்றுலா பகுதியில் 2024 ஆம் ஆண்டில் தினசரி வெப்பநிலை 18.91 பாகை செல்சியசாக பதிவு செய்யப்பட்டு, மிகவும் வெப்பமான ஆண்டாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக இயற்கைவளம் மற்றும் இயற்கை நிலைத்தன்மை துணை அமைச்சர்டத்தோ ஶ்ரீ ஹுஹங் தியோங் சி தெரிவித்தார்.
”இந்த எண்ணிக்கை 1991 முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான நீண்ட கால சராசரி தினசரி வெப்பநிலையான 18.05 பாகை செல்சியசுடன் ஒப்பிடும்போது 0.86 பாகை செல்சியஸ் அதிகரிப்பைக் காட்டுகிறது. கேமரன் மலையில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை 1998-ஆம் ஆண்டு மே மாதத்தில் 27.9 பாகை செல்சியஸ் ஆகும். அதே நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 1989-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 10 பாகை செல்சியசாக பதிவு செய்யப்பட்டது,” என்றார் அவர்.
கேமரன் மலையின் பருவநிலை மாற்றம் மற்றும் அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளின் எண்ணிக்கைகள் குறித்து கோப்பெங் நாடாளுமன்ற உறுப்பினர் டான் கார் ஹிங் எழுப்பிய கேள்விக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
1961-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரையில் கேமரன் மலையில், 689 நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
Source : Bernama
#CameronIsland
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews