திருமண வீட்டில் களவாடிய மூதாட்டிக்கு 24 மாதங்கள் சிறைத்தண்டனை

திருமண வீட்டில் களவாடிய மூதாட்டிக்கு 24 மாதங்கள் சிறைத்தண்டனை

கிளந்தான், 25/02/2025 : திருமண வீட்டில் பணத்தைக் களவாடியதாக சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்ட மூதாட்டி ஒருவருக்கு, இன்று தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, இன்று, கிளந்தான், பாசிர் மாஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 24 மாதங்கள் சிறைத் தண்டனை மற்றும் 3,000 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

அபராதத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், ஆறு மாத சிறைத் தண்டனையும் 61 வயதான துவான் மைமுன் செ துவானுக்கு விதிக்கப்பட்டது.

மயங்கி விழும் நிலையில், தம் மீது சுமத்தப்பட்ட குற்றஞ்சாட்டை, மாஜிஸ்திரேட் முஹமட் பௌசான் முஹமட் சுஹாய்ரி முன்னிலையில் அம்மூதாட்டி ஒப்புக் கொண்டார்.

இம்மாதம் முதலாம் தேதி, கிளந்தான், பாசிர் மாஸ், கம்போங் தாசிக் பெராஙானில் உள்ள வீடொன்றில் அக்குற்றத்தைப் புரிந்துள்ளார்.

சொத்துகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் கட்டிடத்தினுள் நுழைந்து, நோர்ஹயாதி முஹமட் நோர் என்பவருக்கு சொந்தமான 2,500 ரிங்கிட் பணத்தை களவாடியதாக அம்மூதாட்டி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, குற்றவியல் சட்டம் செக்‌ஷன் 380-இன் கீழ், 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் இரண்டு குற்றப்பதிவுகளை அம்மூதாட்டி கொண்டுள்ளார்.

எனவே, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான சிறைத் தண்டனையை, இன்று தொடங்கி அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source : Bernama

#Kilantan
#PDRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews