2026 ஆசிய விளையாட்டுப் போட்டி; பதக்கப் பிரிவில் இணையும் MLBB மின்னியல் விளையாட்டு

2026 ஆசிய விளையாட்டுப் போட்டி; பதக்கப் பிரிவில் இணையும் MLBB மின்னியல் விளையாட்டு

ஜப்பான், 24/02/2025 : Mobile Legends Bang Bang, MLBB எனப்படும் மின்னியல் விளையாட்டு 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக பதக்கப் பிரிவில் இடம்பெறும்.

2026ஆம் ஆண்டில் ஜப்பான், Aichi-Nagoya-வில் நடைபெறவிருக்கும் இந்த விளையாட்டுப் போட்டியில் களமிறங்கும் 11 மின்னியல் விளையாட்டுப் போட்டிகளுக்கான பட்டியலில் MLBB-யும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிய ஒலிம்பிக் மன்றம் OCA அறிவித்துள்ளது.

OCA நிர்வாகக் குழுவின் அவசர இயங்கலைக் கூட்டத்திற்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதுடன் அனைத்து 11 போட்டிகளிலும் பங்கேற்பதற்கு ஏகமனதாக ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

MLBB-ஐத் தவிர்த்து, Competitive Martial Arts, Pokemon Unite, Honor of Kings, League of Legends, PUBG Mobile, Identity V Naraka: Bladepoint, Gran Turismo 7, Efootball Series மற்றும் Puyo Puyo Champions ஆகிய மின்னியல் போட்டிகளும் இப்பிரிவில் உட்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, கடந்த 2018ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்த மின்னியல் விளையாட்டு ஒரு முன்னோட்டப் போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னர், 2022ஆம் ஆண்டில் Hangzhou ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஏழு மின்னியல் விளையாட்டுக்கள் பதக்கப் பிரிவில் இடம்பெற்றன.

Source : Bernama

#20thAsianGames
#AichiNagoya2026
#MobileLegendsBangBang
#MLBB
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews