புக்கிட் ஜாலில், 23/02/2025 : 2025 மலேசிய ஹாக்கி லீக் போட்டிகளில் தொடர்ந்து சாதனைப் படைத்து வரும் திரெங்கானு ஹாக்கி அணி TNB கிண்ணத்தைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனைப் படைத்தது.
நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில், அது TNB அணியுடன் 1-1 என்று சமன் கண்ட வேளயில், பின்னர், பினால்டி வாய்ப்பில் திரெங்கானு 3-0 என்ற கோல்களில் வாகை சூடியது.
புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கோல் போடும் வாய்ப்புகளைத் திரெங்கானு அணியே மிகச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.
TNB-யின் முதல் கோலை அதன் இறக்குமதி ஆட்டக்காரர் அடித்த வேளையில், திரங்கானுவின் முதல் கோல் உள்ளூர் ஆட்டக்காரர் முஹமட் அரிஃப் சாஃபி இஷாக் வழி 18-வது நிமிடத்தில் போடப்பட்டது.
ஆட்டம் சமநிலை முடிவை எட்டியதால், பினால்டி வழி வெற்றியாளர் உறுதி செய்யப்பட்டது.
அதில் வெற்றிப் பெற்ற திரெங்கானு. 2023-ஆம் ஆண்டில் செய்த ஹாட்ரிக் சாதனை மீண்டும் நிலைநிறுத்தியது.
Source : Bernama
#TNBMalaysianHockeyLeague2025
#TNBMHL2025
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.