கோலாலம்பூர், 20/02/2025 : போலி அடையாள அட்டை மற்றும் பிறரின் அடையாள அட்டையை வைத்திருக்கும் குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் பொருட்டு, 2020-இல் இருந்து 2024-ஆம் ஆண்டு வரை பல்வேறு அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் தேசிய பதிவுத் துறை 717 பேரை கைது செய்துள்ளது.
அந்த எண்ணிக்கையில் 320 பேர், 1990-ஆம் ஆண்டு, தேசிய பதிவு விதிமுறைகள், விதிமுறை 25 உட்பிரிவு ஒன்று, உட்பிரிவு E-இன் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா தெரிவித்தார்.
பிறரின் அடையாள அட்டையை விற்கும் அல்லது வைத்திருக்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் உட்பட எந்தவொரு தரப்பினருடனும் தமது தரப்பு சமரசம் காணாது என்று டாக்டர் ஷம்சுல் கூறினார்.
”எங்களிடம் கடுமையான நடைமுறைகள், நிர்வாகம் மற்றும் விதிமுறைகள் உள்ளன. குற்றம் செய்யும் எந்தவோர் அதிகாரியும் அவர் செய்த குற்றத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படுவார். இது ஒரு முக்கிய தேசிய ஆவணம் என்பதால், இதில் எங்களுக்கு எந்த சமரசமும் கிடையாது. தேசிய அடையாளத்தை நாங்கள் மிகவும் பாதுகாப்பாக கவனித்துக் கொள்கிறோம் குறிப்பாக சட்டவிரோத அடையாள அட்டை வழங்கல் நடவடிக்கையில்,” என்றார் அவர்.
கடப்பிதழ் மற்றும் அடையாள அட்டை மோசடியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட நபர்களைக் கண்காணிக்க, உள்துறை அமைச்சால் எடுக்கப்பட வேண்டிய தீவிர நடவடிக்கைக்கான கால வரையறை குறித்து இன்று மக்களைவையில் மஸ்ஜிட் தானா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் எழுப்பியக் கூடுதல் கேள்விக்கு டாக்டர் ஷம்சுல் அவ்வாறு பதிலளித்தார்.
Source : Bernama
#DatukSeriDrShamsulAnuarNasarah
#FakeIDCards
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews
Comments are closed, but trackbacks and pingbacks are open.