செத்தியா ஆலாம் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆடவர் சுட்டுக் கொலை

செத்தியா ஆலாம் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆடவர் சுட்டுக் கொலை

கிள்ளான், 18/02/2025 :  சிலாங்கூர், செத்தியா ஆலாமில் உள்ள ஒரு பேரங்காடியில் கடந்த வாரம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக நம்பப்படும் சந்தேக நபர் இன்று அதிகாலை கிள்ளான்,  பூலாவ் கெத்தாமில் போலீசாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

இன்று அதிகாலை மணி மூன்றுக்கு ஒரு  பூலாவ் கெத்தாமில்  உள்ள தங்கும் விடுதியில் புக்கிட் அமான் மற்றும் சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறையை உட்படுத்திய சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 30 வயதுடைய அந்த ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

தங்கும் விடுதியின் அறையில், சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது போலீசாருக்கும் சந்தேக நபருக்கும் இடையே துப்பாக்கிச் சூட்டு மோதல் நடந்த நிலையில் அதில் சம்பந்தப்பட்ட ஒரு ஆடவரை போலீஸ் சுட்டுக் கொன்றதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

சந்தேக நபரிடம் தோட்டாக்கள் நிரம்பிய இரு துப்பாக்கிகள் இருந்ததை போலீஸ் கண்டுப்பிடித்துள்ளது.

முன்னதாக, அந்நபர் மீது ஒன்பது குற்றப் பதிவுகள் உள்ளன.

அதில் ஒரு போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கு மற்றும் ஏழு வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் தொடர்பான குற்றங்கள் என்று தெரிய வந்துள்ளதாக HUSSEIN OMAR கூறினார்.

கடந்த இரு நாட்களாக அவர் அந்த விடுதியில் தலைமறைவாக இருந்துள்ளார்.

இம்மாதம் பிப்ரவரி எட்டாம் தேதி செத்தியா ஆலாமில் உள்ள ஒரு பேரங்காடியில் ஒரு சந்தேக நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் துப்புரவு பணியாளர் காலில் காயம் ஏற்பட்டது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர், அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

Source : Bernama

#SetiaAlam
#ShootOut
#PDRM
#Entamizh
#MalaysiaNews
#MalaysianNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
#MalaysianTamilNews