கோலாலம்பூர், ஆகஸ்டு 9- காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நாடளாவிய நிலையில் உள்ள மெக்டோனல்ஸ் துரித உணவக புறக்கணிப்பு நடத்தப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன், விவேக தொலைத்தொடர்பு சாதனங்களில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக மெக்டோனல்ஸ் உணவக புறக்கணிப்பு குறித்து குறுந்தகவல்கள் வேகமாகப் பரவின.
இந்த குறுந்தகவல்களுக்கு அமோக ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து நேற்று நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள மெக்டோனல்ஸ் துரித உணவகங்கள் வெறிச்சோடின. ஆனாலும் மக்களிடையே பரவிய குறுந்தகவலில் உலகப் புகழ்ப்பெற்ற அந்த துரித உணவு நிறுவனத்திற்கு எதிரான புறக்கணிப்பு என்றே குறிப்பிடப்பட்டிருந்தாலும், நேற்று பல மெக்டோனல்ஸ் உணவகங்கள் முன்பு எதிர்ப்புப் போராட்டங்களும் நடைபெற்றதைக் காண முடிந்தது.