கோலாலம்பூர், 03/01/2025 : இன்று தொடங்கியிருக்கும், 15-ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது தவணைக்கான முதல் கூட்டத்தை மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
கடந்தாண்டு ஜனவரி 31-ஆம் தேதி, நாட்டின் 17-ஆவது மாமன்னராக பொறுப்பேற்றப் பின்னர், சுல்தான் இப்ராஹிம் தொடக்கி வைக்கும் இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும்.
மக்களவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் மற்றும் மேலவைத் தலைவர் டத்தோ அவாங் பிமீ அவாங் அலி பாசாவுடன் மாமன்னர் நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இரண்டு துணைப் பிரதமர்கள், டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி மற்றும் டத்தோ ஶ்ரீ ஃபடில்லா யூசோப், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் தலைவர்கள் ஆகியோர் இச்சடங்கில் கலந்து கொண்டனர்.
மக்களவைக் கூட்டம் 18 நாட்கள் நடைபெறவிருக்கும் வேளையில் 4ஆம் தேதி தொடங்கி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரச உரையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான விவாதத்தில் ஈடுபடுவர்.
பின்னர், 19 தொடங்கி 25-ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அது குறித்து பதில் அளிக்கவிருப்பதோடு, 26-ஆம் தேதி தொடங்கி ஆறு நாள்களுக்கு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்.
மேலும், மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 13 நாட்களுக்கு, மேலவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Source : Bernama
#Agong
#JointParliamentSession
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.