ஆர்லிங்டன்[அமெரிக்கா], 30/01/2025 : அமெரிக்கா, வாஷிங்டன் டிசி அருகே சிறிய ரக பயணிகள் விமானமும் அமெரிக்க இராணுவத்தின் Black Hawk ஹெலிகாப்டரும் மோதி விபத்துக்குள்ளாகின.
நேற்று, ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் அருகே இவ்விபத்து நிகழ்ந்தது.
60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்களுடன் பயணித்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அந்த விமானம் கன்சாஸில் புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணித்ததாக கூறப்படுகிறது.
ஹெலிகாப்டரும் விமானமும் ஆற்றில் விழுந்த நிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இக்கோர விபத்தை தொடர்ந்து, ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் அட்டவனையிடப்பட அனைத்து விமானங்களின் புறப்பாடுகளும் தரையிறக்கங்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆற்றிலிருந்து பல சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதா The Washington Post செய்தித் தளம் தெரிவித்தது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
Source : Bernama
#USA
#FlightAccident
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.