விடுமுறையில் அதிகரிக்கும் பயணிகள்; தயார்நிலையில் மலேசிய விமான நிலையத் தரப்பு

விடுமுறையில் அதிகரிக்கும் பயணிகள்; தயார்நிலையில் மலேசிய விமான நிலையத் தரப்பு

சிப்பாங், 28/01/2025 : சீனப் புத்தாண்டு மற்றும் பள்ளி விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 17 தொடங்கி பிப்ரவரி 16-ஆம் தேதி வரை ஒரு மாதத்திற்கு, சுமார் 47 லட்சம் பயணிகள் அனைத்துலக விமான நிலையம், கே.எல்.ஐ.ஏ-வின் வழி பயணிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அந்த எண்ணிக்கையில் 27 லட்சம் பயணிகள் முதலாவது முனையத்தின் வழியும், 20 லட்சம் பயணிகள் இரண்டாவது முனையத்தின் வழியும் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக, மலேசிய விமான நிலையங்களின் நிர்வாக இயக்குநர் டத்தோ முஹமட் இசானி கானி தெரிவித்தார்.

அதனைக் கருத்தில் கொண்டு, அக்காலக்கட்டத்தில் கூடுதல் 592 விமான பயணங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெர்னாமாவிடம் இன்று கே.எல்.ஐ.ஏ-இல் முஹமட் இசானி கூறினார்.

“இந்தக் காலக்கட்டத்தில் முனையம் ஒன்றில் 143 மற்றும் முனையம் இரண்டில் 449. மேலும், இக்காலக்கட்டத்தில் 33,000 பயணிகள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார் அவர்.

பயணிகள் அதிகரிப்பைக் கையாள, முனையங்களுக்கு வெளியே போக்குவரத்தை நிர்வகித்தல், நுழைவு முகப்புகளில் செயல்முறைகளைத் துரிதப்படுத்துதல் உட்பட வசதிகள் மற்றும் உபகரணங்களை பராமரித்தல் போன்ற தயார்நிலை பணிகளையும் தமது தரப்பு மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

Source : Bernama

#AirTravel
#ChineseNewYear
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia