கூலிம், 25/01/2025 : மருத்துவ சுற்றுலாவிற்கான ஓர் இடமாக மலேசியாவைத் தேர்ந்தெடுப்பது, சட்டவிரோத சிகிச்சையகச் சேவை மற்றும் போலி மருத்துவர் சான்றிதழ் தயாரிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கிறது.
நாட்டின் மருத்துவத் துறை மீது அண்டை நாடுகளின் கவனத்தை பெற்றுள்ள நிலையில், குறிப்பாக இந்தோனேசியா சுகாதார சேவையை பெறுவதற்கு பினாங்கு, மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களை தேர்வு செய்வதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
”அதற்கான கோரிக்கை அதிகமாக இருப்பதால் போலி சிகிச்சையகம், போலி மருத்துவர் போன்ற பிரச்சனைகள் எழுகின்றன. ஆனால், அவர்கள் என்ன கூறினாலும், குடிநுழைத்துறை செயல்முறையை எளிதில் கடந்து விட முடியாது. அந்நோக்கத்திற்காக ஒரு விசாவை வெளியிடும்போது, குடிநுழைவுத்துறை தொடர்ந்து கவனமாக இவ்விவகாரத்தை நிர்வகிக்கும்,” என்றார் அவர்.
இன்று, கெடா, கூலிம், சுங்கை காராஙான் தேசியப்பள்ளியில், உள்துறை அமைச்சுடனான சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் சைஃபுடின் அவ்வாறு கூறினார்.
கோலாலம்பூர் முழுவதிலும் அந்நிய நாட்டினர் நடத்தும் மருத்துவ சிகிச்சையகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், மலேசிய குடிநுழைவுத்துறை சுகாதார அமைச்சுடன் இணைந்து வங்காளதேசத்தைச் சேர்ந்த 10 ஆடவர்களைக் கைது செய்ததாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
Source : Bernama
#MedicalTourism
#MedicalTourismInMalaysia
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.