புத்ராஜெயா, 20/01/2025 : இலக்கவியல் அச்சுறுத்தல்களை ஆக்கப்பூர்வமாக கையாள்வதில் அண்மைய தகவல் பரிமாற்றம் மற்றும் வட்டார ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு ஆசியான் இணையக் குற்ற பணிக்குழுவை அமைக்குமாறு மலேசியா வலியுறுத்துகிறது.
தற்போது இணையக் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள், செயற்கை நுண்ணறிவு AI, எந்திரன் போன்றவற்றை பயன்படுத்தி அதிநவீன தாக்குதல்களை மேற்கொள்வது குறித்து எச்சரிக்கை விடுத்து, இலக்கவியல் பொருளாதார வளர்ச்சி தொடர்பான மேலும் ஆற்றல்மிக்க பாதுகாப்பு செயல் திட்டம் தேவை என்று துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
”விவாதங்கள் மதிப்புமிக்கவை என்றாலும் செயல்படுத்துதல் அவசியம். அரசாங்கங்கள், சட்ட அமலாக்க நிறுவனங்கள், தொழில்துறை தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இந்த முக்கிய அம்சங்களில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். முதலில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆக்கப்பூர்வமாக கண்டறிந்து தடுக்க ஏ.ஐ பயன்படுத்தி முன்கூட்டியே கணிப்பது மற்றும் உடனடி கண்காணிப்பு நடவடிக்கையை நாம் மேற்கொள்ள வேண்டும், ” என்றார் அவர்.
இணைய பரிவர்த்தனைகளைப் பாதுகாக்கவும் அடையாள மோசடியைக் குறைக்கவும் தேசிய அளவில் தொடரேடு அடிப்படையிலான அடையாள சரிபார்ப்பு முறையை நிறுவ வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
Source : Bernama
#AISSE25
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.