நவீன அமலாக்க அமைப்பை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்

நவீன அமலாக்க அமைப்பை உடனடியாக வலுப்படுத்த வேண்டும்

புத்ராஜெயா, 20/01/2025 : நாட்டில் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக “நவீன காவல்” கொள்கை மூலம் நவீன அமலாக்க அமைப்பை உடனடியாக வலுப்படுத்துவதில் அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் கூறினார்.

குற்றவியல் அச்சுறுத்தல்களை திறம்பட கையாளவும், சட்ட அமலாக்க செயல்முறையை விரைவுபடுத்தவும் வளர்ச்சி அடைந்த நாடுகள் இது போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவதாக அவர் விளக்கினார்.

குற்றவியல் சவால்களை எதிர்கொள்ளும் செயல்திறனை அதிகரிக்க, உறுப்பினர்களை முழுமையாக நம்பியிருக்காமல் இன்டர்போல் மற்றும் ஆசியானாபோல் போன்ற அனைத்துலக அமைப்புகளால் அமல்படுத்தப்படும் செயல்பாட்டு முறைகளைப் பயன்படுத்த மலேசியா அறிவுறுத்தப்படுவதாக டாக்டர் அஹ்மாட் தெரிவித்தார்.

”அனைத்து ஆசியான் நாடுகளுக்கும் பி.டி.ஆர்.எம் மற்றும் ஆசியானாபோல் ஆகிய திறன்களில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். என்றாலும், குற்றவாளிகள் குறிப்பாக இணையக் குற்றவாளிகள், தங்கள் திறன்களையும் மேம்படுத்தியுள்ளனர். எனவே, அமலாக்க அதிகாரிகள் தங்கள் திறன்களை மிஞ்ச வேண்டும் அல்லது குற்றவாளிகளுடன் ஒப்பிடும்போது மேலான நிலையைக் கொண்டிருக்க வேண்டும். அது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமாக இருந்தாலும் சரி, தனிநபராக இருந்தாலும் சரி, அல்லது எந்தக் குழுவாக இருந்தாலும் சரி, இது உடனடியாக செய்யப்பட வேண்டும், ” என்றார் அவர்.

இன்று புத்ராஜெயாவில் ஆசிய அனைத்துலக பாதுகாப்பு உச்சிநிலை மாநாடு மற்றும் கண்காட்சியைத் தொடக்கி வைத்தப் பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia