பத்துமலை இந்திய கலாச்சார மையம் திறப்புவிழா கண்டது – டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோ ஸ்ரீ சரவணன் பங்கேற்பு

பத்துமலை இந்திய கலாச்சார மையம் திறப்புவிழா கண்டது - டான் ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோ ஸ்ரீ சரவணன் பங்கேற்பு

பத்துமலை, 19/01/2025 : இன்று, பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் அமைந்திருக்கும் இந்திய கலாச்சார மையம் மிகச் சிறப்பான முறையில் திறப்பு விழா கண்டது. தமிழர்-இந்தியர் கலாச்சாரங்களின் இயல், இசை, நாடக பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் மையமாக இது திகழும்.

இந்த பத்துமலை இந்திய கலாச்சார மையத்தில் பத்து மலை குறித்த புகைப்படங்கள், தகவல்கள் டிஜிட்டல் வடிவில் 6 மொழிகளில் இடம்பெரும் ஒரு அருங்காட்சியகமும் சுமார் 2,000 பேர் அமரக்கூடிய வகையில் 10000 சதுர அடியில் ஒரு திருமண மணடபமும் இடம்பெறும்.

இந்த இந்திய கலாச்சார மையத்தில் முதல் நிக்ழ்ச்சியாக டான் ஸ்ரீ நடராஜா எழுதியுள்ள ”பத்துமலை பக்திமலை” நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நூலை ம.இ.கா தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன்கோவில் தேவஸ்தானம் தலைவர் வெளியிட ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ M. சரவணன் அவர்கள் ரிம 20,000.00 தொகை கொடுத்து பெற்றுக்கொண்டார்.

“கட்டடக் கலை, ஓவியம், சிற்பக் கலை, கைவினைக் கலை ஆகிய எல்லா துறைகளிலும் நாம் தேர்ச்சி பெற்றுள்ளோம். நமது பாரம்பரியத்தை இளைய தலைமுறையினருக்கு கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் பணியை இம் மையம்
ஆற்றும்.” என டத்தோ ஸ்ரீ சரவணன் கூறினார்.

இந்திய கலாச்சாரத்திற்கு அடிப்படையாக சமயம் இருப்பது நமது இந்து சமயத்தில் சிறப்பு என டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

முன்னர் கிரேட் அண்ட் கோல்ட் நடனப் பள்ளி மாணவர்களின் கலை படைப்புகள் நடைபெற்றது.

#BatuCavesIndianCulturalCenter
#TanSriNataraja
#TanSriVikneswaran
#DatukSeriMSaravanan
#BatuCaves
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia