ஜாலான் தெக்பி, 16/01/2025 : மலேசிய இராணுவப்படை பணியாளர்களின் நல்வாழ்வை வலுப்படுத்தும் நோக்கில் தற்காப்பு அமைச்சு, 10 முக்கியமான அம்சங்களைக் கோடிட்டுள்ளது.
அதில் வசதியான வசிப்பிடங்கள் மற்றும் கல்வியில் கவனம் செலுத்தப்படும் என்று அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமாட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
இலக்கிடப்பட்ட பெரிய அளவிலான மாற்றுத்திறனாளி குழுவிற்கு வழங்கப்படும் உதவித் தொகை அதிகரிக்கப்பட்டு ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளதாக டத்தோ ஶ்ரீ முஹமாட் காலிட் நோர்டின் விவரித்தார்.
”முன்னர் அமல்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளி உதவித்தொகையை ரத்து செய்து, அனைத்து நிலைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும், ” என்றார் அவர்.
இன்று, தற்காப்பு அமைச்சின் 2025 புத்தாண்டு நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, முஹமாட் காலிட் அவ்வாறு கூறினார்.
ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக, 200 ரிங்கிட்டிலிருந்து 685 ரிங்கிட் வரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை, அவர்களின் கல்வி நிலையைப் பொறுத்து 1,600 ரிங்கிட்டிலிருந்து 5,400 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நாட்டின் தற்காப்பு செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் சொத்துகளை பெறும் பொருட்டு மலேசிய இராணுவப் படை, ஏடிஎம்கு இவ்வாண்டு 1,200 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட முக்கிய சொத்துகளின் பட்டியலில் தரைப் படைக்காக 105 மில்லிமீட்டர் பேக் ஹவுட்சர் வகை பீரங்கியும் அடங்கும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
”எல்.சி.எஸ் 2 தண்ணீரிலும் இறக்கப்பட்டு அதன் பணி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. எல்.சி.எஸ் 3, 2026 ஜனவரியில் திட்டமிடப்பட்ட தண்ணீரில் இறக்குவதற்கான இறுதித் தயாரிப்புகளில் தற்போது உள்ளது, ” என்றார் அவர்.
அதோடு, அரச மலேசிய கடற்படை, திஎல்டிஎம்மின் பயன்பாட்டிற்காக மேற்பரப்பு வகையான ஏவுகணை, மூன்று நடுத்தர உயரம் கொண்ட ஆளில்லா வான்வழி அமைப்பு ஆகியவையும் அதில் அடங்குவதாக முஹமட் காலிட் கூறினார்.
Source : Bernama
#MalaysianArmy
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.