வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாலைகளை மறுசீரமைக்கும் பணிகள் ஜனவரி இறுதி வரை மேற்கொள்ளப்படும்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாலைகளை மறுசீரமைக்கும் பணிகள் ஜனவரி இறுதி வரை மேற்கொள்ளப்படும்

ஜாலான் சுல்தான் சலாஹுடின், 15/01/2025 : வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து சாலைகளை மறுசீரமைப்பது குறித்து கருத்துரைத்த அஹ்மாட் மஸ்லான், இவ்வாண்டு ஜனவரி மாத இறுதிவரை கட்டம் கட்டமாக இந்த மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

“எங்களுக்கான ஒதுக்கீடு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது. எனவே, ஒதுக்கீடு திரும்ப வழங்கப்பட்டு விட்டது. பொதுப்பணி அமைச்சின் 98 விழுக்காட்டு ஒதுக்கீடுகள் செலவு செய்யப்பட்டு விட்டன. வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி, ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் குறிப்பாக கிளந்தான், திரெங்கானு, கெடா, ஜோகூரில் நாங்கள் மறுசீரமைப்போம்”, என்று அவர் கூறினார்.

அந்த மறுசீரமைப்பிற்கான செலவுகளுக்குப் பொருளாதார அமைச்சு மற்று நிதி அமைச்சிடமிருந்து கூடுதல் ஒதுக்கீட்டைப் பெற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் விவரித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சாலைகளை மறுசீரமைப்பதற்கான செலவு 10 கோடியே 15 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட்டை எட்டியுள்ளதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சாண்டர் நந்தா லிங்கி நேற்று தெரிவித்திருந்தார்.

Source : Bernama

#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia

Comments are closed, but trackbacks and pingbacks are open.