புத்ராஜெயா, 07/01/2025 : ஜனவர் 06 முதல் மலேசியாவிற்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள மாண்புமிகு சிங்கப்பூர் பிரதம மந்திரி லாரன்ஸ் வோங் இன்று காலை இஸ்தானா நெகராவிற்கு வருகை புரிந்தார். அப்போது மாட்சிமை பொருந்திய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சிங்கப்பூர் பிரதமரை வரவேற்றார்.
இஸ்தானா நெகராவிற்கு வருகை புரிந்த சிங்கப்பூர் பிதமருடன் மாமன்னர் ஒரு மணி நேரம் சந்திப்பு நடைபெற்றது. வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசன், உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜாம்ப்ரி அப்துல் காதிர், வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அம்ரான் முகமட் சின், மற்றும் டத்தோ இந்தேரா டாக்டர். அஸ்பர் முகமது முஸ்தபர் மற்றும் சிங்கப்பூருக்கான மலேசிய தூதுவர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.
மலேசியா- சிங்கப்பூர் அதிகாரிகள் உயர் மட்ட சந்திப்பின் பொருட்டு சிங்கப்பூர் பிரதனர் இந்த அரசுமுறை பயணத்தை பேற்கொண்டிருக்கிறார்.
சிங்கப்பூர் தூதுக்குழுவில் சிங்கப்பூர் குடியரசின் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் மற்றும் மலேசியாவுக்கான சிங்கப்பூர் குடியரசின் தூதுவர் TYT வானு கோபால மேனன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Source : Sultan Ibrahim Sultan Iskandar Facebook
#MalaysiaSingapore
#PMAnwar
#Agong
#AgongSultanIbrahim
#pmsingapura
#LawrenceWong
#SAMBUTAN RASMI
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#MalaysiaTamilNews
#MalaysiaOnlineMedia
#MalaysiaOnlineNews
#Malaysia
Comments are closed, but trackbacks and pingbacks are open.