ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள பிரிட்டன் நாட்டு ராணுவச்சாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பொறுப்பில் உள்ள தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆப்கன் ராணுவத்தினருக்கான உடையில் வந்த வீரர் ஒருவர் அவரை கொன்றதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜெர்மன் நாட்டு தளபதி ஒருவர் உள்பட 15 படையினரும் அந்த வீரரின் தாக்குதலால் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இரு-நட்சத்திரங்களை அணிந்துள்ள அந்த அதிகாரியின் பெயர் வெளியிடப்படவில்லை. 13 வருட போரில் தற்போது தான் அமெரிக்காவின் முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கன் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரான ஜாஹிர் அசாமி இத்தாக்குதல் குறித்து கூறுகையில், ஆப்கன் ராணுவ வீர்ர் போல் உடையணிந்து வந்த நபர் தான் அதிகாரியை கொன்றதாக கூறியுள்ளார். அமெரிக்க தரப்பில் கூறுகையில், 12க்கும் மேற்பட்ட தங்கள் நாட்டு ராணுவ வீரர்கள் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக கூறியுள்ளது. தங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய எதிரியும் கொல்லப்பட்டதாக கூறியுள்ள அமெரிக்கா, அவரை சுட்டுக்கொன்றது அமெரிக்காவா அல்லது ஆப்கன் ராணுவத்தினரா என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளது.
Previous Post: பெரும்பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவுக்கு 8 வது இடம்
Next Post: காலிட் இப்ராகிமுக்கு:கடிதம் அனுப்பப்பட்டது