பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 30-இல் இருந்து 60 விழுக்காட்டிற்கு அதிகரிப்பு

பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 30-இல் இருந்து 60 விழுக்காட்டிற்கு அதிகரிப்பு

பாங்கி, 23/12/2024 : குத்தகை நிறுவன ஒப்பந்தங்களில் பங்கேற்கும் பூமிபுத்ராக்களின் எண்ணிக்கை 30 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காட்டிற்கு அதிகரித்துள்ளது.

அவர்களின் பங்களிப்பு பெரும்பாலும், பராமரிப்பு மற்றும் கட்டுமானத் துறையை உட்படுத்தி உள்ளதாக பொதுப்பணி துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.

2024-கின் மூன்றாம் காலாண்டு வரை, பூமிபுத்ரா குத்தகை நிறுவனங்களுக்கு 1,500 கோடி ரிங்கிட் மதிப்புடைய பணிகள் வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

அக்காலக்கட்டத்தில், G1-இல் இருந்து G7 வரைக்குமான பிரிவில் உள்ள 2,138 பூமிபுத்ரா குத்தகை நிறுவனங்களுக்கு இந்தக் குத்தகைகள் வழங்கப்பட்டுள்ளதாக அஹ்மட் மஸ்லான் கூறினார்.

“எண்ணிக்கைக் குறைவு. ஆனால், மதிப்பு அதிகம். 1430 ரிங்கிட் மதிப்புடைய 332 G7 குத்தகைகள். அதுவே, நான் சி.ஐ.டி.பி-இடம் இருந்து பெற்ற எண்ணிக்கையாகும். 332 குத்தகையாளர்கள் பூமிபுத்ரா குத்தகையாளர்கள் ஆவர். அதேபோல G2, G3, G4, G5, G6 பிரிவைச் சேர்ந்த குத்தகையாளர்கள்,” என்றார் அவர்.

பங்களிப்பு குறைவாக கருதப்பட்டாலும், குத்தகை நிறுவன ஒப்பந்தங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் இந்த முயற்சியின் வழி, பூமிபுத்ரா குத்தகையாளர்களின் ஆற்றலை வலுப்படுத்த முடியும் என்று அஹ்மட் மஸ்லான் குறிப்பிட்டார்.

சிலாங்கூர், பாங்கியில், நெடுஞ்சாலை குத்தகை நிறுவனத்துடனான பூமிபுத்ரா சங்க ‘MatchMaking’ திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Source : Bernama

#Bumiputera
#Rawang
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia