கோலாலம்பூர், 11/10/2024 : வரும் காலங்களில் மலிவான மற்றும் அதிவேக இணைய சேவையை வழங்க அதன் நிறுவனத்தார் முன் வரவேண்டும்.
Point of Presence, PoP எனும் திட்டத்தை செயல்படுத்துவதன் வழி 100 MEGABYTES வேகத்தில் மாதத்திற்கு 39 ரிங்கிட் வரை குறைவான கட்டணத்தில் இணைய சேவைகளை வழங்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
”எம்.சி.எம்.சிஇல் உள்ள திட்டம் அல்லது தொடர்பு அமைச்சின் கீழ் உள்ள Point of Presence திட்டம் மூலம் நாம் பணிப்புரியும் போது இணைய சேவை வழங்குநர்கள் மக்களுக்கு மலிவான விலையை வழங்குவது பொருத்தமானது என்று நான் பார்க்கிறேன். இந்த திட்டங்கள் முற்றிலும் வணிக ரீதியானவை அல்ல. ஆனால், அதிகம் வீயூக நோக்கத்தைக் கொண்டுள்ளன. அதாவது, இடைவெளியைக் குறைப்பது, வெளிப்புற ரீதியாக மட்டுமல்லாமல் வேகமான இணையத்தை அனுபவிக்கவும் உதவுகிறது. பொருளாதார ரீதியிலும் உதவுகிறது”, என்று அவர் கூறினார்.
இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற ‘Perajurit Broadband’ தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஃபஹ்மி ஃபட்சில் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமாட் காலிட் நோர்டினும் கலந்து கொண்டார்.
Source : Bernama
#InternetService
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia