கோலாலம்பூர், 09/10/2024 : வளர்ச்சியடைந்த மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடு என்ற நிலையை அடைவதில் மலேசியா சரியான தடத்திலேயே பயணிக்கிறது.
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னதாக கணிக்கப்பட்ட 4.3 விழுக்காட்டை காட்டிலும் இவ்வாண்டு 4.9-ஆக உயரலாம் என்று உலக வங்கி தற்போது கணித்திருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி அதனைத் தெரிவித்தார்.
வளர்ச்சியடைந்த மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடு என்ற நிலையை அடையும் மலேசிய அரசாங்கத்தின் இலக்கை நோக்கி சரியான தடத்தில் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன். நேற்று உலக வங்கி மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி முன்னதாக கணிக்கப்பட்ட 4.3 விழுக்காட்டை காட்டிலும் இவ்வாண்டு 4.9ஆக உயரலாம் என்று அறிவித்திருந்தது என்றார் அவர்.
புதன்கிழமை, KKDW அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் உரையாற்றும் போது, டாக்டர் அஹ்மாட் சாஹிட் அவ்வாறு கூறினார்.
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் சுமார் இரண்டு ஆண்டுகால நிர்வகிப்பில், நாடு நேர்மறையான வளர்ச்சியை குறிப்பாக பொருளாதார வளர்ச்சியில் பதிவு செய்துள்ளதைக் காண முடிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முதலீடு, வர்த்தகம் வலுவடையச் செய்தல் மற்றும் அரசியல் நிலைத்தன்மையை உருவாக்குதல் போன்ற கொள்கைகளை ஒருமைப்பாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்திதால், அவ்வெற்றி கிடைத்ததாக டாக்டர் அஹ்மாட் சாஹிட் விவரித்தார்.
Source : Bernama
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia