புத்ராஜெயா, 08/10/2024 : சிறார் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரட்டை சுமை பிரச்சனையைக் களைவதற்கான தேசிய வியூகத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்னர், அதை ஆய்வு செய்யுமாறு அமைச்சரவை உறுப்பினர் குறிப்பாக சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் அத்தகவல் தெரிவிக்கப்பட்டதாக தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இத்திட்டம் குறித்த அண்மைய அறிக்கை அமைச்சரவைக்கு கிடைத்திருந்தாலும், அது முழுமையாக ஆராயப்பட வேண்டும்.
குறிப்பாக, சிறுவர்களுக்கான பள்ளித்தவணை நேர வேறுபாடு தொடர்பான விவகாரம் குறித்து ஃபஹ்மி பேசினார்.
இதனிடையே, வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கான உதவித் தொகை நிறுத்துவது குறித்து அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் பேச்சாளருமாகிய ஃபஹ்மி கூறினார்.
Source : Bernama
#ChildNutrition
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia