ஜோகூர்பாரு, 06/10/2024 : அநாகரீகமாக உடையணிந்து மற்றும் ஓரினச்சேர்க்கை, இருபாலினம் போன்ற கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்ட Pan Asia 2024 எனும் அனைத்துகல ஓட்டப் போட்டியை, ஏற்பாடு செய்தது தொடர்பிலான விசாரணைக்கு உதவும் பொருட்டு, போலீசார் உள்ளூர் ஆடவர் ஒருவரையும் வெளிநாட்டினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.
39 முதல் 70 வயதுக்குட்பட்ட அவர்கள், நேற்றிரவு மணி 10 அளவில் கோத்தா திங்கியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கைது செய்யப்பட்டதாக, ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம். குமார் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.
அதோடு, ஓட்டப் பந்தயத்தின் போது பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆடைகள் மற்றும் அணிகலன்கள், பண்டார் பெனாவாரில் உள்ள அந்த தங்கும் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டன.
அவர்களின் சுய முடிவினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, அது ஏற்பாட்டாளர்களை பிதிநிதிக்கவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேவேளையில், கைதானவர்கள் போதைப்பொருளை உட்கொள்ளவில்லை என்றும், அவர்கள் மீது கடந்தகால குற்றவியல் பதிவுகள் எதுவுமில்லை எனவும் கண்டறியப்பட்டதாக குமார் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டம் செக்ஷன் 294-இன் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
Source : Bernama
#PanAsia2024
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia