கோலாலம்பூர், 01/10/2024 : ஏஐ(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப செயல் திட்டத்தை, அடுத்த 12 மாதங்களுக்குள் நிறைவு செய்ய மலேசியா இலக்கு கொண்டுள்ளது.
இலக்கிடப்பட்ட அந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் தொடர்பான முக்கிய கண்டுபிடிப்புகளில் அந்த செயல் திட்டமும் ஒன்றாகும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஆயினும், அந்த காலக்கட்டத்திற்கு முன்னதாகவே அதன் இலக்கை அடைய முடியும் என்று தாம் நம்புவதாக டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
”12 மாதங்கள் என்று நான் கூறும்போது, அதுவும் அமைச்சரின் ஆலோசனை, என்னைப் பொருத்தவரை 12 மாதங்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இல்லையேல் அமைச்சரவையில் சிலவற்றை சரிசெய்ய வேண்டும்”, என்று அவர் கூறினார்.
அதேவேளையில், மலேசியா முழுவதிலும் உள்ள முக்கிய துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை அரசாங்கம் துரிதப்படுத்தும் என்று அன்வார் குறிப்பிட்டார்.
அதன் மூலம், செயல்முறைகளை மேம்படுத்தி, செலவுகளைக் குறைத்து அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூரில், இன்று நடைபெற்ற ஏஐ தொடர்பான A Google For Malaysia எனும் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது பிரதமர் அதனைத் தெரிவித்தார்.
Source : Bernama
#Anwar
#Entamizh
#MalaysiaNews
#LatestNews
#Malaysia