வளமான எதிர்காலத்தை உருவாக்க இந்தியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்

வளமான எதிர்காலத்தை உருவாக்க இந்தியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்

கோலாலம்பூர், 28/09/2024 : இந்தியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே அவர்கள் சார்ந்திருக்கும் தொழில் துறைகளுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்று மலேசிய இந்திய வர்த்தக தொழிலியல் சங்கங்களின் சம்மேளனம், மைக்கியின் தலைவர் டத்தோ ஶ்ரீ கோபாலகிருஷ்ணன் நாராயணசாமி கூறினார்.

மைக்கியின் தொடர் முயற்சியால் முடித்திருத்தும் நிலையங்கள், நகைக் கடைகள், ஜவுளி ஆகிய இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு ஏழாயிரத்து ஐநூறு அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்க அரசாங்கம் அனுமதி வழங்கியது.

எனினும், தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து இந்திய வர்த்தகர்களின் மேம்பாடு குறித்து செயல்படுவதில் மைக்கி எப்போதும் முனைப்புடன் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

”இந்த மாநாட்டின் கருப்பொருள் முக்கியமானது என்னவென்றால் மைக்கியும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணனுடன் இணைந்து பல நன்மைகள் நம்முடைய இந்திய வர்த்தகர்களுக்கு மலேசியாவில் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறோம். தற்போது இஐபி-யின் மூலம் எப்படி இந்திய மக்களுக்கு உதவிகள், புது இந்திய வர்த்தகர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இருக்கின்ற வர்த்தகர்களுக்கு எப்படி உதவிகள் செய்ய வேண்டும். அதை கலந்தாலோசித்து பல திட்டங்களைச் செய்து விட்டோம்”, என்றார் அவர்.

நாட்டிலுள்ள இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக் களைந்து, அவர்களின் எதிர்காலத்தை வளமாக்குவதில் பிரதமர் கொண்டுள்ள திட்டங்களின் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

இன்று நடைபெற்ற இம்மாநாட்டில் நாடு தழுவிய நிலையில் உள்ள சுமார் 17 வர்த்தக சங்கங்களைச் சேர்ந்த 233 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

#MalaysiaNews
#LatestNews
#Malaysia
#MAICCI
#Entamizh

Comments are closed, but trackbacks and pingbacks are open.